புதுக்கோட்டையில் இரு சமூகத்தினரிடையே மோதல்: சமாதானம் செய்துவைத்த வட்டாட்சியர்

புதுக்கோட்டையில் இரு சமூகத்தினரிடையே இருந்துவந்த மோதலை வட்டாட்சியர் சுரேஷ்குமார் சமாதானம் செய்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த மெய்யபுரத்தில் இரு சமூகத்தினர் இடையே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் எடுத்து செல்வதில் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 9 வழக்குகள் பதியப்பட்டிருந்த நிலையில் இரு சமூகத்தினரை சமாதானம் செய்யும் கூட்டம் வட்டாட்சியர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில் மெய்யபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை இரு சமூகத்தினரும் மதச்சார்பற்ற சமாதான முறையில் கொண்டாடுவது என்றும் ஒருவருக்கொருவர் மனம் புண்படும் படி பேசக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் இரு தரப்பினரும், எந்தவித பிரச்சினைகளும் செய்யமாட்டோம் என சம்மதம் தெரிவித்து சமாதான கூட்டத்தில் கையெழுத்திட்டனர்.

Exit mobile version