விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலை தடுக்க, காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழ்குடி, செங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள், மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு திரும்பியுள்ளனர். பரளச்சி அருகே சென்றபோது முழக்கமிட்டவாறு சென்றதால், மற்றொருதரப்பினர் வாகனத்தின் மீது கல்வீசி தாத்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.