கரூரில் மூட்டை மூட்டையாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சின்ன ஆண்டாள் கோவில் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்குச் சென்ற காவல்துறையினர் வேன் மூலம் ஒரு வீட்டில் மூட்டைகள் இறக்கப்பட்டதைக் கண்டு அவற்றைச் சோதனையிட்டனர். அவற்றில் குட்கா பொட்டலங்கள் இருப்பது தெரிந்ததை அடுத்து சுமார் ஒரு டன் குட்கா மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். குட்கா மூட்டைகள் சாவ்லா ராம் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அந்த வீட்டை அவர் குட்கா பதுக்கி வைக்கும் குடோனாகப் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.