திருச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட 750 கிலோ புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தாராநல்லூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், இரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த சிவா என்பவரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.