ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறையினர் கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாரச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள மாம்பழங்கள் கார்பைட் கல் மூலம் செயற்கையாக பழுக்க வைத்து விற்கப்படுவதாக ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திடீரென ஆய்வு மேற்கொண்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சென்று கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை சோதனை மூலம் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். மேலும் ரசாயணம் பூசப்பட்ட பச்சை பட்டாணிகள், வத்தல்களையும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.