தமிழகத்தில் ‘பத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர் வழிகள் விரைவில் களையெடுக்கப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த போது பத்திரிக்கையாளர் என்ற பொறுப்பான பணியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி கொள்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மஞ்சள் பத்திரிகை நடத்துபவர்களும் தங்களை பத்திரிக்கையாளர் என கூறி கொள்வது வருத்தத்துகுறியது என தெரிவித்த நீதிபதிகள், பத்திரிகைகளை பதிவு செய்ய சம்மந்தப்பட்ட பத்திரிகையின் குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிகை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டதாகவும், விரைவில் அவர்கள் களையெடுக்கப்படுவார்கள் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.