கோ-ஆப்டெக்ஸில் விற்கப்படும் துணிகள் குறித்து பேரவையில் காரசார விவாதம்

கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமற்ற துணிகள் கொள்முதல் செய்யப்பட்டதாக கைத்தறித்துறை அமைச்சர் கூறும் கருத்து ஏற்புடையதல்ல என்றும், அமைச்சரின் நெசவாளர்களை கொச்சைப்படுத்தும் செயல் என்றும் சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கைத்தறி துணிநூல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாவத்தில் பேசிய அமைச்சர் காந்தி, கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்தார்.

அதனை, அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மேலும், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யப்படும் துணிகள் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இருந்தே பெறப்பட்டவை எனக் கூறிய அவர், அமைச்சரின் இந்த கருத்து நெசவாளர்களையே குறை சொல்வது போல் உள்ளது என்றார்.

எனவே நெசவாளர்களை குறை சொல்வதை ஏற்க முடியாது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், நெசவாளர்கள் நெய்யும் துணிகள் தேக்கமடையக் கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு கோ ஆப் டெக்ஸ் தொடங்கப்பட்டதாக கூறிய அவர், அந்த நிறுவனத்தில் உள்ள துணிகளின் தரம் குறித்து அமைச்சரே தவறாக பேசினால், மக்கள் அச்சம் கொள்ளமாட்டார்களா என கேள்வி எழுப்பினர்.

மேலும், அமைச்சர் கூறிய கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதிமுக ஆட்சியில் நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க 340 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம்14 கோடியே 82 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டதாக கூறினார்.

Exit mobile version