ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய 12 மூத்த அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய 12 மூத்த அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பி மத்திய நிதி அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து நிதித்துறை செயல்பாட்டினை மேம்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை நிர்மலா சீதாராமன் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய 12 மூத்த அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பி மத்திய நிதி அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் ஊழல், லஞ்சம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக சக பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லைகொடுத்த ஐஆர்எஸ் அதிகாரி ஒருவரும் கட்டாய ஓய்வில் அனுப்பட்டுள்ளார். இதேபோல் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருக்கும் 12 மூத்த அதிகாரிகளும் வருமான வரித்துறையில் தலைமை ஆணையர், முதன்மை ஆணையர், ஆணையர் ஆகிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டிருப்பது நிதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version