தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் கொரோனா தடுப்பு கள பணியாளர்களுக்கு, கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் மற்றும் சானிடைசர் ஆகியவற்றை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நடவடிக்கையால், சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மக்களின் நலன் கருதியும், தொற்று பரவாமல் தடுக்கும் விதத்திலும் இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். தரகர் மூலமாக இ-பாஸ் பெறுபவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்தார்.
Discussion about this post