அயோத்தி விவகாரத்தில் சமரசக் குழு, 7 நாட்களுக்குள் தங்கள் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வர விரும்பிய உச்சநீதிமன்றம் சமரசக் குழுவை நியமித்தது. வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர், ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா, வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் தலைமையில் சமரசக் குழு அமைக்கபட்டு, 8 வாரங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் 8 வாரங்களுக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யததால் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில் சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்றும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சமரசக் குழு ஒரு வாரத்திற்குள் தங்கள் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.7 நாட்களுக்குள் தேதிக்குள் சமரசக் குழுவால் தீர்வு காண முடியாவிட்டால், ஜூலை 25 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு நாள்தோறும் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.