அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் நிறைவு

அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுக்கள் நேற்றும், இன்றும் இரண்டு நாட்களாக வழங்கப்பட்டது. மாநகராட்சி மேயர் தேர்தலுக்கான விருப்ப மனுக் கட்டணம் 25 ஆயிரம் ரூபாயாகவும், வார்டு மாமன்ற உறுப்பினருக்கான கட்டணம் 5 ஆயிரம் என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் மாவட்ட தலைமையகத்தில் உரிய கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றனர். இந்நிலையில் 2 நாட்களாக நடைபெற்ற விருப்பமனு விநியோகம் இன்று நிறைவடைந்தது. 

Exit mobile version