ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதகுடி ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதன் ஒரு பகுதியாக பரமக்குடி அருகேயுள்ள கமுதக்குடியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவுள்ள இந்த ரயில்வே மேம்பாலத்தினால் வாகனங்கள் ரயில்வே கேட்டில் காத்திருக்கத் தேவையில்லை என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.