நிறைவு பெற்றது சர்வதேச அலை சறுக்கு போட்டி

திருப்போரூர் அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரையில் நடைபெற்று வந்த சர்வதேச அலை சறுக்கு போட்டி நிறைவு பெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரையில் கடந்த 23ஆம் தேதி தொடங்கிய சர்வதேச அலைசறுக்கு போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட இப்போட்டியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். இறுதி நாளில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடி, டி. ஜி. பி., சைலேந்திர பாபு, கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Exit mobile version