குன்னூரில் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி முடித்துப் பணிக்குச் செல்லும் இளம் ராணுவ வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. இங்குப் பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்நிலையில், கடந்த 46 வாரங்களாகப் பயிற்சி பெற்ற 320 பேர் பணிக்குச் செல்கின்றனர். அவர்கள் அனைவரும் இன்று பகவத்கீதை, பைபிள், குரான் மற்றும் தேசியக் கொடி மீது, கைவைத்து சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு நடைபெற்றது.