மனைவி மற்றும் பிள்ளைகளை கடத்தியதாக உதவி ஆய்வாளர் மீது புகார்

கோவில்பட்டியில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை, காவல்துறை உதவி ஆய்வாளர் கடத்தியதாக, பாலசுப்ரமணியன் என்பவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மும்மலைப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலி தொழிலாளியான இவருடைய மனைவி பெயர் ராமலெட்சுமி. இவர்களுக்கு என்று 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். கரடிகுளத்தினை சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாலசுப்ரமணியனின் உறவினர்.

இதன் மூலமாக பாலசுப்பிரமணியன் வீட்டிற்கு உதவி ஆய்வாளர் கருப்பசாமி அடிக்கடி வருவது வழக்கம் இதன் மூலம் பாலசுப்பிரமணியன் மனைவி ராமலெட்சுமிக்கும், உதவி ஆய்வாளர் கருப்பசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளகாதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மேலப்பாறைப்பட்டியில் நடந்த கொலை வழக்கில் பாலசுப்பிரமணியன் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு சிறை சென்றார்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு வீட்டில் மனைவி 3 பெண் பிள்ளைகள் என்று யாரும் இல்லமால் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து நீதிமன்றத்தில் வழக்கும் காவல் நிலையத்தில் புகாரும், கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரில் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் வீட்டில் இருந்த 26 பவுன் நகை, ரூ.1 லட்சம் மதிப்புள்ள விளை பொருட்கள் மற்றும் ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், மற்றும் ரூ.1 லட்சும் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை உதவி ஆய்வாளர் கருப்பசாமி கொண்டு சென்றுவிட்டதாகவும் அதை மீட்டு தருமாறும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8-ம் தேதி உதவி ஆய்வாளர் கருப்பசாமி மற்றொரு உதவி ஆய்வாளருடன் வந்து என்னை தாக்கினார் என்று குற்றமும் சாற்றுகின்றார் கருப்பசாமி. மேலும் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு நீதி வழங்க வேண்டும், என்று கூறி தீடீரென பாலசுப்பிரமணியன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டவரை காவல்துறையினர் சமதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறி கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு, பாலசுப்ரமணியனை அனுப்பிவைத்தனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version