கமலஹாசன் மீது 40க்கும் மேற்பட்ட இடங்களில் புகார்

தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் மீது 40க்கும் மேற்பட்ட இடங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை தேர்தல் ஆணையத்தில் முறையிடக் கூறி வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, தண்டபாணி அமர்வு விசாரைணக்கு ஏற்க மறுத்தது. ஏற்கனவே இதுபோன்ற வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை சுட்டிக்காட்டி வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நடிகர் கமலஹாசன் மீது 40 க்கும் மேற்பட்ட இடங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே அரவக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் தன்னை கைது செய்யக் கூடாது என கோரி உயர் நீதிமன்ற கிளையில் கமல்ஹாசன் முன் ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது.

Exit mobile version