காளிங்கராயன் கால்வாயில் சாயக் கழிவுகள் கொட்டப்படுவதாக புகார் – மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு அருகேயுள்ள காளிங்கராயன் கால்வாய் பகுதிகளில் சாயக் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட மாசுக்கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஈரோடு அக்ரஹார பகுதிகளில் காளிங்கராயன் கால்வாயை ஒட்டியுள்ள கரை பகுதிகளில் சாய திடக்கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் காளிங்கராயன் கால்வாய் பகுதிகளில் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, பஞ்சு கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காளிங்கராயன் கால்வாய் பகுதிகளில் குறிப்பிட்ட இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், அதன் மூலம் சாயக் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Exit mobile version