சன் லைப் தொலைக்காட்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் சொப்பணசுந்தரி என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க கோரி அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கம் சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து அனைத்திந்திய சேவைகளுக்கான இயக்கத்தின் செயலாளர் கன்யாபாபு கூறுகையில்,
சன் லைப் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பப்படும் ‘சொப்பண சுந்தரி என்ற நிகழ்ச்சியானது மிகவும் ஆபாசமாக உள்ளது. இதைப் பார்க்கும் குழந்தைகள் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வரும் நட்சத்திரங்கள் சிலர் ஆடை இல்லாமலே நடிக்கின்றனர். இது சமூக சீர்கேடுகளை விளைவிக்கும். இதனால் பாலியல் துன்புறுத்தல் அதிகமாகும் சூழல் ஏற்படும்.
ஆகவே சொப்ப சுந்தரி என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி போலீஸ் கமிஷனரிடம் எங்களது இயக்கம் சார்பில் புகார் கொடுத்துள்ளோம். கமிஷனர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தெரிவித்தார்.