சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி நடத்தியதாக நடிகர் ஷ்யாம் மீது புகார்

சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி நடத்தியதாக நடிகர் ஷ்யாம் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சூதாட்ட விடுதி செயல்பட்டு வருவதாகவும், இதனை நடிகர் ஷ்யாம் சட்ட விரோதமாக நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து உதவி ஆணையர் முத்து வேல்பாண்டி தலைமையிலான காவல்துறையினர் சூதாட்ட விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த நடிகர் ஷியாம் உட்பட 14 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பணம் வைத்து சூதாடவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனைவரையும் விடுவித்தனர்.

Exit mobile version