ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஜோதிடர் அபரித்ததாக புகார்

திருப்பூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஜோசியர் ஒருவர் அபகரித்து விட்டதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

திருப்பூர் கிருஷ்ணசாமி நகர் 4 வது வீதியில் வசித்து வருபவர் செந்தில்குமாரி. இவர் இயற்கை மருந்துகள் கடையை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு குடும்ப சூழ்நிலை சரி இல்லாததால் தேவராஜ் அரசு என்ற ஜோதிடரை அணுகி உள்ளார். ஜோதிடர் தேவராஜ் இவர்களது குடும்ப சூழ்நிலையை தெரிந்து கொண்டு செந்தில் குமாரியின் தாயார் சரஸ்வதியை வசியம் செய்து விட்டதாக செந்தில்குமாரி புகார் கூறியுள்ளார். இதையடுத்து செந்தில் குமாரியையும் அவரது மகளையும் வீட்டை விட்டு துரத்தி விட்டு ஜோசியர் தேவராஜ் அரசு அவரது குடும்பத்துடன் வந்து தங்கி விட்டதாக கூறப்படுகிறது. தனது வீட்டை மீட்டுத்தருமாறு செந்தில் குமாரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Exit mobile version