திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் முதலமைச்சரை அவதூறாக பேசியதாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில், திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, 50 வாகனங்களில் ஆட்களை அழைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தினார். பிரச்சாரத்தின்போது விதிமுறைகள் மீறியுள்ளதாகவும்,கோவை அதிமுக வழக்கறிஞர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை அவதூறாக பேசிய ஸ்டாலின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசி வரும் ஸ்டாலின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.