நாட்டில் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக புகார்

நாட்டில் செயல்பட்டு வரும் 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பல்கலைக்கழக மானியக்குழு நடத்திய ஆய்வில் நாட்டில் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவது தெரியவந்துள்ளது. அடுத்ததாக டெல்லியில் ஏழும், மேற்கு வங்கம், ஒடிசா, ஆகிய மாநிலங்களில் தலா 2 போலி பலைக்கழகங்களும் செயல்படுகின்றன. இதேபோல் பிற மாநிலங்களில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version