மத்திய அமைச்சரவையின் சார்பில் நடத்தப்படும் தேசிய மென்பொருள் உருவாக்கும் போட்டி சென்னை அருகே கேளம்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது.
தேசிய மென்பொருள் உருவாக்கும் போட்டியான ஹாக்கத்தான் இறுதி போட்டிகள் இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் இந்த போட்டியானது கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு நடைபெறும் போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 280 கல்லூரி மாணவர்கள் 36 அணிகளாக பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு நாட்டின் வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை அமைச்சகங்களிலிருந்து போட்டிக்கான புதிர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றிற்கு விடை காணும் வகையில் மாணவர்கள் மென்பொருளை உருவாக்க வேண்டும் என்பது முக்கிய விதியாக உள்ளது. இதற்காக மாணவர்கள் மென்பொருள் உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக போட்டியில் பங்கேற்ற மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாட உள்ளார்.