சாலை விபத்தில் உயிர் இழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்-அமைச்சர் வி.கே.சிங்

சாலை விபத்தில் உயிர் இழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும், சட்ட திருத்த மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முந்தைய ஆட்சியில், மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவிற்கு ஒப்புதலை பெறவில்லை. இந்நிலையில், இந்த சட்ட திருத்த மசோதாவை, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர், வி.கே.சிங், மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதன்படி, உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு, 5 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைபவர்களுக்கு, இரண்டரை லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க, இம்மசோதா வழி செய்யும். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை உயர்த்துவதன் மூலம், விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு, தகுந்த இழப்பீடுகளை உயர்த்தி வழங்க முடியும். அதே சமயம், இந்த சட்ட திருத்தம், எக்காரணத்தினாலும், மாநில அரசுகளின் உரிமைகளையும், அதிகாரத்தையும் பறிக்காது. மாறாக, சாலை விபத்துகளில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க உதவும்.

Exit mobile version