உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்காக இடம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு – அமைச்சர் தங்கமணி 

உயரழுத்த மின்சார கேபிள்களை புதைவடம் வழியாக கொண்டு வருவது என்பது சாத்தியப்படாத ஒன்று என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
விளை நிலங்களில் அமைக்கப்படும் உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் சார்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுவதாக கூறினார். இந்தநிலையில் சத்தீஸ்கரில் இருந்து நேரடியாக தமிழகத்திற்கு 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொண்டுவருவது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என சுட்டிக் காட்டிய அவர், 800 கிலோ வாட் மின்சாரத்தை புதைவடமாக கொண்டு வருவதற்கான கேபிள்கள் உலகில் எங்கும் இல்லை என்று விளக்கம் அளித்தார். மேலும், உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்காக இடம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்குவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

 

 

 

Exit mobile version