தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கம்பெனி துணை ராணுவம் வருகை!

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு பணிகளுக்காக, 65 கம்பெனி துணை ராணுவம் சென்னை வந்தடைந்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 6ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு அதிமுக உட்பட அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலின் பாதுகாப்பு பணிகளுக்காக 65 கம்பெனி துணை ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் ரயில்கள் மூலம் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனையடுத்து அவர்களை, தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு அனுப்பும் பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பிற்காக மொத்தம் 235 கம்பெனி துணை ராணுவம் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version