தேனியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 360 கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்று கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், அரசு அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விழாவில் பேசிய துணை முதலமைச்சர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்கள் அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்து ஆரோக்கியமான முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.