தாமிரபரணி நீரின் தரத்தை ஆய்வு செய்ய குழு அமைப்பு

தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் அடங்கிய குழுவை  அமைத்து தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிர பரணி ஆற்றில் தற்போது கழிவு நீர் கலக்கப்படுவது குறித்தும், அவ்வாறு கழிவு நீர் கலக்கப்பட்டால், அதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், தாமிர பரணி ஆற்று நீரின் தற்போதைய தரத்தை, ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி,ஆகியோர் அடங்கிய குழு அமைத்து உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும்  உத்தரவிட்டப்பட்டது.

Exit mobile version