நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஏற்பட்டதன் காரணமாக அமாவாசை, பௌர்ணமி தினங்கள் மட்டுமே பக்தர்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் கோயிலில் தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனவும், மலை பகுதியில் அன்னதான கூடம் மூடப்பட்டதால் மற்ற கடைகளில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பக்தர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதன் செய்தி நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் கடந்த 5ஆம் தேதி ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக இந்து அறநிலையத்துறை ஆணைளயாளர் பணிந்திர ரெட்டி சதுரகிரி கோயிலில் இன்று ஆய்வு செய்தார்.