விடுதலைப்புலிகள் மீதான தடை நீட்டிப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது.

விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தடை நீட்டிப்பு தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகையில் இன்றும் நாளையும் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. நீதிபதி சங்கீதா திங்கரா சேகல் தலைமையில் நடைபெறும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் தகவல்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.

Exit mobile version