2020 – 21ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து கூற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5 சதவீதமாகக் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச போர்ப்பதற்றமும் இந்தியப் பொருளாதாரத்தை வெகுவாக பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் 2020 – 21ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் வரும் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். கருத்து தெரிவிப்பதற்கான இணையதளத்தையும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.