சென்னை மாநகராட்சியின் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள MEGA STREET திட்டத்தை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் சார்பில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் MEGA STREET என்ற பெயரில் மாநகரின் பல இடங்களில் சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. இதன் தொடக்க விழா, சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் சண்முகம், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, 30ஆண்டுகளுக்கு சாலைகள் சேதாரம் ஆகாதவாறு, திட்டமிடப்பட்டு சாலைகள் வடிவமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். முதற்கட்டமாக, அண்ணாநகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள சலைகள் மேம்படுத்தப்படும் என தெரிவித்தார்.