கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவைப் பருவத்தை தொடங்கிய தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இந்த ஆண்டிற்கான இரண்டாம் பருவம் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், விவசாயிகளின் நலன் கருதி சிறப்பு அரவை முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சக்கரை ஆலை இணையத்தலைவர் ராஜசேகர், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காமராஜ் முன்னாள் அமைச்சர் மோகன் ஆலை நிர்வாக இயக்குனர் சிவமலர் உள்ளிட்டடோர் கலந்து கொண்டு அரவையை துவக்கி வைத்தனர். 80 ஆயிரம் டன்னிலிருந்து 1லட்சம் டன் வரை கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.