ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை தொடர்பாக, ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சி நூற்றாண்டு விழா சிறப்பு நிதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நகர்ப்புற சாலை மற்றும் புதிய நகராட்சி கட்டட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு, புதிய நகராட்சி அலுவலக கட்டடம் கட்டும் பணியையும், நகர்ப்புற சாலை அமைக்கும் பணியையும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.