20வது இந்தியா நவரத்தினக் கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி தொடக்கம்

கரூரில் 20ஆவது இந்தியா நவரத்தினக் கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் 20ஆவது இந்தியா நவரத்தினக் கற்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில், இடம் பெற்றுள்ள படிகமாலை, பச்சைநிறக் கற்கள், சிவப்புநிறக் கற்கள், மோதிரங்கள், வளையல்கள், கற்களாலான சுவாமி சிலைகள் போன்றவற்றைப் பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.

Exit mobile version