நிலக்கரி நீராவி இன்ஜினை வைத்து இயங்கும், நீலகிரி மலை ரயிலில் பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்டது.
பாரம்பரியம் மாறாமல் இருக்கும் நீலகிரி மலை ரயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த மலை ரயிலுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு ஜூலை 15-ல், யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது. இந்த தினத்தை கொண்டாடும் விதமாக குன்னூர் ரயில் நிலையம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன. அப்போது, இந்த சிறப்பு பாரம்பரிய ரயிலின் இன்ஜினின் முக்கியத்துவம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.