கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நடிகர் பாண்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 74.
மறைந்த நகைச்சுவை நடிகர் இடிச்சப்புளி செல்வராஜின் உடன் பிறந்த தம்பியான நடிகர் பாண்டு, ஏராளாமான தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவியும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மருத்துவ கண்கணிப்பில் இருந்த நடிகர் பாண்டு, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் காலமானார்.
அவரது மனைவி திவீர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
மறைந்த நடிகர் பாண்டு, அதிமுகவின் கட்சி கொடியையும், இரட்டை இலை சின்னத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பால் நடிகர் பாண்டு காலமானதால் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை.
மருத்துவமனையில் இருந்து நேரடியாக பெசன்ட் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.