பத்திரமாக திரும்பி வா நண்பா… ராணுவ வீரருக்கு ஊக்கம் கொடுத்த விஜய்

எல்லையில் பதட்டம் நிலவிவரும் நிலையில் நடிகர் விஜய் ராணுவ வீரரை தொலைபேசியில் அழைத்து அவரது பணியை ஊக்குவித்துள்ள ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்தியாவிடம் ஒப்படைத்தது. அவரது விடுதலையை நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழகத்தை சார்ந்த ராணுவ வீரரான தமிழ்செல்வனிடம் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது. அவரது நிலைகுறித்து விசாரிக்கும் விஜய் அவரை உற்சாகப்படுத்துவது போன்று அந்த உரையாடல் உள்ளது. மேலும் பணியிலிருந்து திரும்பி வரும்போது சந்திப்பதாகவும் அந்த உரையாடல் உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்

Exit mobile version