கோமாளி படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது…

கோமாளி திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அப்பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் ஆகஸ்டு 15 ஆம் தேதி கோமாளி படம் வெளியானது. இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் , கே.எஸ் ரவிக்குமார், யோகி பாபு என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கோமாளி திரைப்படத்தின் கருவானது 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை ஆச்சரியத்துடன் எதிர்க்கொள்வதை காமெடியான கதை களத்தில் உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தற்போது கோமாளி திரைப்படத்தில் சென்சாருக்கு முன்னும் பின்னும் மாற்றப்பட்ட காட்சிகளை before,after என குறிப்பிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான “vels entertainment ” வெளியிட்டுள்ளது.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version