சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹியை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹியை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில் ரமானி ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது உயர்நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக வினித் கோத்தாரி இருந்து வருகிறார். இந்த நிலையில், பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் ஏ.பி சாஹியைச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதே போன்று, மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றும் ஏ.கே.மிட்டலை, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், திரிபுரா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சய் கரோலைப் பாட்னா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கவும், கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

Exit mobile version