தமிழகம் முழுவதும் கல்லூரிகள் திறப்பு!

பொறியியல், கலை அறிவியல், டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கடந்த டிசம்பர் மாதம் இறுதியாண்டு வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளை விரைந்து நடத்துவதற்காக வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தலாம் என உயர்கல்வித்துறை அறிவுறுத்திய நிலையில், சென்னையில் இன்று அனைத்து கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கின. முகக்கவசம் அணிந்து கல்லூரி சென்ற மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்னர் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாணவர்களுக்கு பேராசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

கொரோனாவால் 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கல்லூரிக்கு வந்தனர். மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கல்லூரிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

 

Exit mobile version