நாடு முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் சேர ஒரே நுழைத் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பெங்களூருவில் இந்த தகவலை தெரிவித்தார். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி ஒப்புதல் கிடைத்தவுடன் நுழைத் தேர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என அவர் கூறினார். ஒப்புதல் கிடைத்தவுடன், நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் நுழைத் தேர்வு கட்டாயமாக்கப்படும் எனத் தெரிகிறது.