நெருப்பில்லாமல் பாரம்பரிய உணவு தயாரித்த கல்லூரி மாணவிகள்

ஈரோடு அருகே, தனியார் கல்லூரி மாணவிகள், நெருப்பில்லாமல் தயாரித்த பாரம்பரிய உணவு கண்காட்சி நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நெருப்பில்லா பாரம்பரிய உணவு கண்காட்சியை, கல்லூரியின் நிறுவனர் தொடங்கி வைத்தார். இதில் அடுப்பை பயன்படுத்தாமல், நெருப்பில் சமைக்காமல், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட 60 வகையான உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. உடலுக்கு தீங்கிழைக்காத, உடல் நலத்தை மேம்படுத்தும் வகையில், பாரம்பரிய உணவுகளான நிலக்கடலை, அவல், சிறுதானியங்கள், பழங்கள், நாட்டுச்சர்க்கரை, காய்கறிகள், பயறு வகைகளைக் கொண்டு, நெருப்பில் சுடாமல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த உணவுகளை உண்பதன் மூலம், வைட்டமின், புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உடலுக்கு கிடைப்பதால், நோய் நொடியின்றி வாழமுடியும் என மாணவிகள் தெரிவித்தனர்.

Exit mobile version