“கல்லூரி மாணவர்கள் பழைய `பஸ் பாஸ்’ பயன்படுத்தி பயணிக்கலாம்”

கல்லூரி மாணவர்கள் பழைய பேருந்து அட்டையை பயன்படுத்தி கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்கலாம் என போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், டிஎன்பிஎல் காகித ஆலையின் கழிவு அய்யம்பாளையம் அருகே உள்ள புகளுர் வாய்க்காலில் கலக்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் விவசாயிகள் முறையிட்டனர். இதையடுத்து, புகளுர் வாய்க்காலை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டு, டிஎன்பிஎல் ஆலையின் உயர் அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வாய்க்காலில் கழிவுநீர் கலக்கப்படுவது தொடர்பாக டிஎன்பிஎல் ஆலைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், கல்லூரி மாணவர்கள், பழைய பேருந்து பயண அட்டையை பயன்படுத்தி, கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என தெரிவித்தார்.

Exit mobile version