விழுப்புரம் சட்டக் கல்லூரிக்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு செய்தார். விழுப்புரத்தில் இயங்கி வரும் சட்ட கல்லூரிக்கு, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலாமேடு பகுதியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 5 புள்ளி 5 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் இந்த கட்டிடத்தின் மதிப்பு 69 கோடி ரூபாய் ஆகும். இதற்கான பணிகள் 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டிடங்கள், வகுப்பறைகள், நூலகங்கள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார். ஏற்கனவே, 59 ஏக்கரில் மாணவர் விடுதியும், 48 ஏக்கரில் மாணவிகள் விடுதியும் அமைக்கப்பட்டு உள்ளன. கல்லூரி நிர்வாக கடடிடங்கள், நூலகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.