புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 66 ஏரி மற்றும் கண்மாய்களில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நற்பவளக்குடி, ஆளப் பிறந்தான், பஞ்சாத்தி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுவரை 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விடும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஆய்வின் போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.