திருச்சி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவடையும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

குடிமராமத்து பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளுக்காக 12 கோடியே 71 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறினார். 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், வரும் 28ஆம் தேதிக்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றும் ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.முக்கொம்பு அணையில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களில் கடைமடை வரை தண்ணீர் முழுமையாக சென்றடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version