விருத்தாசலத்தில் 300 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட நாணயங்களை சேகரித்து ஒரு குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகரில் வசிக்கும் இவர், தனது தாத்தா, அப்பா ஆகியோர் நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தாக தெரிவித்துள்ளார். அவர்கள் இருவரும், அக்கால அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய நாணயம் முதல் 300 ஆண்டுகள் கடந்து தற்போது வரை உள்ள உள் மற்றும் வெளி நாட்டு நாணயங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வந்தனர். இந்த நாணயங்களை தற்போது மாரியம்மாள் பாதுகாத்து வருவதோடு, நாணய சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவில் கிபி 1835 ஆம் ஆண்டு முதன் முதலாக, ஒரு பக்கம் கிழக்கிந்திய கம்பெனி முத்திரை பதித்தும் மறுபக்கம் ராணி விக்டோரியா முகம் பதித்தும் வெளியான 14 நாணயங்களில் ஒன்று மாரியம்மாளிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலும் தங்கள் குடும்பத்தினர் தொடர்ந்து நாணய சேகரிப்பில் ஈடுபடுவார்கள் என்று மாரியம்மாள் தெரிவித்தார். இந்நாணயங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ள அரசு ஒத்துழைப்பு நல்கினால் பார்வைக்காக வைக்க தயாராக இருப்பதாக மாரியம்மாள் தெரிவித்தார்.