காஷ்மீரில் கடும் குளிர் வாட்டி வதைத்து வரும்நிலையில் ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காஷ்மீரில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. மைனஸ் 17 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர் நிலவுவதால் காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடும் குளிர் காற்று வீசுகிறது. அங்குள்ள வீடுகள், மரங்கள் என அனைத்தும் பனியால் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பனிக்காலங்களில் மற்ற போக்குவரத்தை காட்டிலும் ரயில் போக்குவரத்தை மக்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். குளிர் காலங்களில் ரயில் போக்குவரத்து சிறந்ததாக இருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.