கோவை செம்மேடு,உக்குளம் கரை உடைப்பு-8 ஏக்கர் சேதம்-அதிகாரி அலட்சியம்-விவசாயிகள் வேதனை

கோவையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் நீரில் மூழ்கின.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 4 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் காரணமாக கோவை மாவட்டம் செம்மேடு பகுதியிலுள்ள உக்குளத்தின் கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களில் புகுந்தது. இதனால் சுமார் 8 ஏக்கரில் பயிரிடபட்டுள்ள சின்ன வெங்காயம் மற்றும் கரும்புகள் நீரில் மூழ்கின. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளே ஜேசிபி இயந்திரத்தை கொண்டு கரையின் உடைப்பை சரி செய்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர்.

Exit mobile version